For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் விமான நிலையம்” - வேட்பாளர் நவாஸ் கனி பேட்டி!

05:05 PM Mar 06, 2024 IST | Web Editor
“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராமநாதபுரத்தில் விமான நிலையம்”   வேட்பாளர் நவாஸ் கனி பேட்டி
Advertisement

“இந்தியா கூட்டணி வெற்றி பெற்றவுடன் ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்படும்” என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி அறிவித்துள்ளார். 

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கீழமுஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாடாளுமன்ற
உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இறகு பந்து உள்விளையாட்டு மைதானம் கட்டப்பட்டது.  இதனை ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.  நிகழ்ச்சியில் பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், பரமக்குடி நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் பள்ளி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இறகுபந்து உள் விளையாட்டு மைதானத்தில் எம்.பி. நவாஸ் கனி மற்றும்
எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் வீரர்களுடன் சிறிது நேரம் இறகு பந்து விளையாடி
மகிழ்ந்தனர்.  அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த எம்பி நவாஸ் கனி கூறியதாவது:

“ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த முறை பாஜகவை எதிர்த்து நேரடியாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றோம்.  மீண்டும் அந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை திமுக தலைமையிலான கூட்டணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.  கடந்த முறை மீனவர்களின் நலனை முன்னிறுத்தி ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் பேசியிருக்கிறோம்.  அதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.  கச்சத்தீவு பகுதியிலே மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமையை வாங்கி தருவதுதான் அதற்கான தீர்வாக இருக்கும்.

அதனை வரக்கூடிய அரசு செய்யும். ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து, எழுத்துபூர்வமாக கேட்ட கேள்விக்கு பதிலளித்திருக்கிறார்கள்.  அதற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை. இந்திய கூட்டணியிலான அரசு வரும்போது ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்”

இவ்வாறு நவாஸ்கனி தெரிவித்தார்.

Tags :
Advertisement