For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#AirIndia-வுக்கு ரூ.98 லட்சம் அபராதம் - காரணம் என்ன தெரியுமா?

02:56 PM Aug 23, 2024 IST | Web Editor
 airindia வுக்கு ரூ 98 லட்சம் அபராதம்   காரணம் என்ன தெரியுமா
Advertisement

ஏர் இந்தியா நிறுவனத்திற்கு, சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

Advertisement

ஏர் இந்தியா நிறுவனம் சமீபகாலமாக பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு லண்டனில் ஓட்டல் அறையில் ஏர் இந்தியாவில் பணியாற்றும் பெண் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோல், நேற்று (ஆக. 22) மும்பையில் இருந்து 135 பயணிகளுடன் திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், பதறி போன, அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் விமானத்தை பத்திரமாக தரையிறக்கி பயணிகளை வெளியேற்றினர்.

தொடர்ந்து பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் வெடிகுண்டு ஏதும் உள்ளதா என சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து அனைத்து பயணிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் பயணிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் வெடிகுண்டு இருப்பதற்கான தடையம் எதுவும் கிடைக்கவில்லை. இந்த சம்பவத்தால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், இன்று (ஆக. 23) ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம் போதுமான பணியாளர்கள் இல்லாமல் விமானங்களை இயக்கியதற்காகவும், தகுதியற்ற விமானி மூலம் விமானத்தை இயக்கியதற்காகவும் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) ரூ.98 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஜூலை 10-ம் தேதி ஏர் இந்தியா சமர்ப்பித்த தன்னார்வ அறிக்கையின் மூலம் இந்த சம்பவம் டிஜிசிஏவின் கவனத்திற்கு வந்ததாக தெரிகிறது.

இதைத் தொடர்ந்து, டிஜிசிஏ விசாரணையை மேற்கொண்டு ஒழுங்குமுறை விதிகளில் குறைபாடுகள் மற்றும் பல மீறல்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இதனால், ஏர் இந்தியாவின் இயக்குநருக்கு ரூ.6 லட்சமும், பயிற்சி இயக்குநருக்கு ரூ.3 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தினமும் பிரச்னைகள் வரிசை கட்டி தான் இருக்கும் என சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Tags :
Advertisement