#Chennai -ல் விமானப்படை சாகச ஒத்திகை | வியப்புடன் பார்த்த மக்கள்!
விமான சாகச ஒத்திகையை முன்னிட்டு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் மீது பறந்த விமானங்களை மக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
இந்திய விமானப்படையின் 72 வது ஆண்டு விழாவை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில்
அக்டோபர் 6ம் தேதி இந்திய விமானப்படையின் 72 விமானங்கள் சாகச நிகழ்ச்சியில்
ஈடுபட உள்ளனர்.இதில் தமிழ்நாடு ஆளுநர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விமானப்படை தலைவர் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர். இதனை முன்னிட்டு ஒத்திகைகள் இன்று முதல் 5ம்தேதி வரை மெரினா கடற்கரைப் பகுதியில் நடைபெறவுள்ளது.
விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, இன்று முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. வான் சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான இயக்கம் தாமதமாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள் : TirupatiLaddu விவகாரத்தில் Twist | சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை திடீர் நிறுத்தம்!
இந்நிலையில், இந்திய விமானப் படை சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை இன்று சென்னை மெரீனா கடற்கரையில் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்ற விமானப் படை விமானங்கள் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானைக் கிழித்துக் கொண்டு பறந்து சென்றதை மக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.