Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#AirPollution | மோசமடைந்த காற்றின் தரம்... எங்கெங்கு தெரியுமா?

02:11 PM Nov 01, 2024 IST | Web Editor
Advertisement

கடந்த சில நாள்களாக பட்டாசுகள் வெடிக்கப்பட்ட வந்த நிலையில், நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு தள்ளப்பட்டது.

Advertisement

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று (அக்.31) கோலகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் நேற்று முன்தினம் முதலே பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர். இதனால் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தது. டெல்லியில் அதிகாலை முதலே அடர்த்தியான புகை சூழ்ந்து காணப்பட்டது. டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் அதிகபட்சமாக காற்றின் தரம் 396 ஆக பதிவாகியுள்ளதாக மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

காற்றின் தரம் மோசமடைந்து வருவதால், மும்பை நகரின் சில பகுதிகளில் இன்று காலை புகை மண்டலமாக காட்சி அளித்தது. அதேபோல், உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் நகரமும் புகை மண்டலாக காட்சியளித்தது. டெல்லி, மும்பையில் பல்வேறு பகுதிகளில், காற்று மாசுவுடன், பனி மூட்டமும் அதிகளவில் இருந்தது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாக, தேசியத் தலைநகரில் காற்று மாசு கணிசமாக அதிகரித்த நிலையில், இன்று மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. தற்போது காற்றின் தரம் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால் டெல்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தீபாவளி நாளான நேற்று காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி காற்றின் தரம் 158 ஆக குறைந்துள்ளது.

Tags :
ChennaiDelhiFire crackersMumbainews7 tamil
Advertisement
Next Article