Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மோசமான நிலையில் டெல்லி சுற்றுச்சூழல் | காற்றுடன் சேர்ந்து மாசடைந்த யமுனை ஆறு... 

02:11 PM Nov 21, 2023 IST | Web Editor
Advertisement

டெல்லியில் காற்று மாசு மிக மோசமான நிலையில், யமுனை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரையால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Advertisement

டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மிக மோசமான நிலையிலேயே நீடிப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் காணப்படுகிறது.

இதனால், புகைமூட்டம் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு போன்றவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து, டெல்லியில் காற்று மாசுடன் சேர்ந்து ஆற்று நீரும் மாசடைந்திருப்பதன் அறிகுறியாக காளிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றின் மேற்பரப்பில் நச்சுக்கள் நிறைந்த ரசாயன நுரைப் பந்துகள் மிதப்பதை காண முடிந்தது. மேலும், யமுனை ஆற்றில் மிதக்கும் ரசாயன நுரையால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Tags :
Air pollutionChemicalDelhiIndiayamunariver
Advertisement
Next Article