ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: குறைந்தபட்ச கல்வித்தகுதி 10-ம் வகுப்பு!
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் கீழ் சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், இளநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு வரும் 26, 27, 29 மற்றும் 30 ஆகிய நாள்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட உள்ளது. தகுதியான இருபாலரும் நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினியில் பணிபுரியும் திறன் மற்றும் ஆங்கிலம், ஹிந்தியில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 28, 50, 55 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுவோருக்கு பதவியின் அடிப்படையில் சம்பளமாக மாதம் ரூ.17,850 முதல் 45,000 வரை வழங்கப்படும். முழுமையான விவரங்களுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
- Duty Manager (Passenger) பதவிக்கு 8 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு சென்னையில் டிச. 26 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
- Duty Officer (Passenger) பதவிக்கு 8 பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு சென்னையில் டிச. 27 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
- Customer Service Executive அல்லது Jr.Customer Service Executive பதவிக்கு சென்னையில் 43 பணியிடங்களும், மதுரையில் 15 பணியிடங்களும், திருச்சியில் 10 பணியிடங்களும், கோயம்புத்தூரில் 12 பணியிடங்களும் உள்ளன. குறைந்தபட்சம் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சென்னையில் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு டிச. 27 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும். மதுரை, திருச்சி, கோவைக்கான பணியிடங்களுக்கு டிச. 29 காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
- Utility Agent Cum Ramp Driver பதவிக்கு 2 பணியிடங்கள் மற்றும் Handyman பதவிக்கு மதுரையில் 20 பணியிடங்களும், திருச்சியில் 10 பணியிடங்களும், கோவையில் 20 பணியிடங்களும் உள்ளன. குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேர்வு டிச. 30-ம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை நடைபெறும்.
இந்த பணியிடங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஏர் இந்தியா இணைய பக்கத்தை காணவும். அல்லது கீழ் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.