Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஐப்பசி மாத பூஜை: #Sabarimala ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு!

09:46 AM Oct 11, 2024 IST | Web Editor
Advertisement

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

Advertisement

புகழ்பெற்ற கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். பின்னர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக அக்.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் ஸ்பாட் புக்கிங் முறை குறித்து இன்று விவாதிக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு பூஜைகள் ஆரம்பமாக உள்ளநிலையில், ஸ்பாட் புக்கிங் முறையை தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், பல கட்டுப்பாடுகளுடன் மீண்டும் ஸ்பாட் புக்கிங் முறை கொண்டுவரப்படும் என தெரிகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள தேவசம் போர்டு தலைமை அலுவலகத்தில் தலைவர் பி.எஸ்.பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெறும் சபரிமலை ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு இறுதி முடிவு தெரியவரும். 

Tags :
Ayyappa TempleBakthiKeralaSabarimala
Advertisement
Next Article