For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும்!” - வி.கே.சசிகலா

03:09 PM Mar 20, 2024 IST | Web Editor
“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில் போட்டியிடும் ”   வி கே சசிகலா
Advertisement

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஒன்று சேர்ந்து ஒரே அணியில்
போட்டியிடும் என்று வி.கே. சசிகலா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

தஞ்சாவூர்மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீதாம்பாள்புரம் அருகே தனியார்
திருமண மண்டபத்தில் நடைபெற்ற காதணி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வி.கே. சசிகலா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, வி.கே. சசிகலா கூறியதாவது:

என்னைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பலம் என்பது என்ன என்று எல்லோருக்கும்
புரியும்.  மூன்று அணியாக இருக்கின்ற அதிமுக ஒன்றாக இணைய வாய்ப்பு வந்ததாக
எனது அனுமானத்தில் கருதுகிறேன்.  தமிழக அரசு தேர்தல் காரணம் சொல்லி எவ்வித ஆக்கப்பூர்வமான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளது.  தூத்துக்குடியில் துப்புரவு பெண் ஒருவர் கொல்லப்பட்டது வேதனை அளிக்கிறது.  முதல்வர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்து வருகிறது.  ஆவின் பாலில் புழு, பூச்சி உள்ளது. அரசு அதை தடுக்க தவறிவிட்டது.  தமிழக அரசின் தற்போதைய கவனம் எப்படியாவது பொய் சொல்லி நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவது.

ஜெயலலிதா ஆட்சியில் இது போன்ற எந்த தவறும் நடந்தது கிடையாது.  2026 தேர்தல் என்பது எங்களுக்கும் திமுகவும் நேரடி போட்டியாக இருக்கும் அந்த தேர்தலில் நான் யார் என்பதை காட்டுவேன்.  திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன். மத்தியில் எந்த ஆட்சி வரவேண்டும் என்று மக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அதாவது இதுவரை ஆட்சி செய்தவர்களில் எந்த ஆட்சி மக்களுக்கு பயன்பட்டதோ அந்த ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும் . ஓபிஎஸ் இரட்டை இலை சின்னம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.  அதிமுகவில் ஏற்பட்டுள்ள பங்காளி சண்டை,  அவர் அதிமுகவை சேர்ந்தவர் தான்.  வருகின்ற 2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.

இவ்வாறு வி.கே.சசிகலா கூறினார்.

Tags :
Advertisement