Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று பதவியேற்பு!

அதிமுகவின் இன்பத்துரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
12:29 PM Jul 28, 2025 IST | Web Editor
அதிமுகவின் இன்பத்துரை மற்றும் தனபால் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டனர்.
Advertisement

மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் தமிழர்களில் 6 பேரின் பதவிக்காலம் கடந்த 24-ம் தேதி நிறைவு பெற்றது. இதையடுத்து புதிய எம்.பி.க்களாக திமுகவைச் சேர்ந்த வில்சன், சல்மா, சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் தேர்வானார். இவர்கள் 4 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற எம்.பி.க்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

Advertisement

மேலும் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால் ஆகிய இருவரும் புதிய எம்.பி.க்களாக தேர்வான நிலையில் இருவரும் இன்று பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக அதிமுகவின் இன்பதுரை, தனபால் ஆகியோர் இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

 

Tags :
AIADMKMPsparliamentrajyasabharajyasabhaelection
Advertisement
Next Article