இன்றைய சட்டப்பேரவை நிகழ்வை புறக்கணிக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் - கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் நடைபெறும் ஆர்பாட்டத்தில் பங்கேற்க திட்டம்!
இன்றைய சட்டப்பேரவை நிகழ்வுகளை புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்தில் கள்ளச்சாரய புழக்கத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் அருத்தியதால் பலர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவி விலக கோரியும் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக இன்று கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை நிகழ்வுகளின் போது கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர மீண்டும் அது குறித்து பேச அனுமதி அளிக்க அவையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து பேரவையில் கேள்வி நேரம் தொடங்குவதற்கு முன்பாகவே அவையில் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.
பேரவை வளாகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறி முழக்கங்களையும் எழும்பினர். இந்நிலையில் இன்றயை சட்டப்பேரவை நிகழ்வுகளையும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.