"அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி" - #EPS பதிவு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே உள்ள அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா் உள்ளிட்டோர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டது அதிமுகவின் முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன். இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும் மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் #டங்ஸ்டன்தடுப்போம், #மேலூர்காப்போம்" என்ற வாசகம் பதிந்த மாஸ்க் அணிந்து கழக சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றதுடன் இந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைவதை எதிர்த்தும், இவ்விவகாரத்தில் மேலூர் மக்களுக்கு நியாயம் கிடைக்கும் விதமாக நான் சட்டமன்றத்தில் ஆதாரங்களுடன் திமுக-வின் நாடகத்தை எடுத்துவைத்து பேசியதன் தொடர்ச்சியாக அதிமுக மேற்கொண்ட முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
மதுரை மாவட்டம் மேலூர் அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளதை வரவேற்கிறேன்.
இது மேலூர் பொதுமக்களின் தொடர் போராட்டத்திற்கும்.
மக்களின் குரலாக களத்தில் போராட்டங்கள், சட்டப்பேரவையில் #டங்ஸ்டன்தடுப்போம், #மேலூர்காப்போம்" என்ற வாசகம்… pic.twitter.com/Rf7fZYE2In— Edappadi K Palaniswami - Say No To Drugs & DMK (@EPSTamilNadu) January 23, 2025
தங்கள் உரிமைகளுக்காக, தொடர்ந்து போராடி வென்ற மேலூர் மக்களுக்கு எனது வாழ்த்துகள். டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் மக்களை ஏமாற்ற முயற்சித்த திமுக அரசின் சதிவேலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலூர் மக்களின் போராட்டத்தை உணர்ந்து, அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை ரத்து செய்ததன் மூலம் மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.