Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம்..!

08:13 PM Jan 22, 2024 IST | Web Editor
Advertisement

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தரிசனம் செய்து பசுவும் கன்றும் தானமாக வழங்கினார்.

Advertisement

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த அதிமுக
பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி.கே.பழனிசாமி
சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் தலைப்பாகை அணிந்து நெற்றியில்
நாமமிட்டு தரிசனம் செய்தார்.

இதையும் படியுங்கள் ; சனாதன சர்ச்சை…. மீண்டும் பாஜக விமர்சனம்! உதயநிதி பதிலடி!

முன்னதாக, சாமி தோப்பிற்கு வந்த அவரை கட்சியினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். அதனைத்தொடர்ந்து, தலைமை பதியின் வடக்கு வாசலில் அமைந்துள்ள வைகுண்டர் தவம் இருந்து பகுதிக்கு சென்று இவரின் வரலாற்றை கேட்டறிந்தார்.

அதன்பின் கிழக்கு வாசல் வழியாக சென்று மூலஸ்தானத்தில் தரிசனம் மேற்கொண்ட பின் தலைமை பதிக்கு பசுவும் கன்றும் தானமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், ராஜ லட்சுமி, ராஜேந்திர பாலாஜி, ஆர் பி உதயகுமார், கடம்பூர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
AIADMKdarshanamEdappadi K. Palanichamygeneral secretaryKANNIYAKUMARISamitoppu Ayya Vaikunder chief padi
Advertisement
Next Article