Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

டிசம்பர் 10-ம் தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
12:17 PM Nov 23, 2025 IST | Web Editor
அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
Advertisement

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

Advertisement

"அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், கழக சட்ட திட்ட விதிகள் 19(vil மற்றும் 25(ii)-ன்படி, வருகின்ற 10.12.2025 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி மண்டபத்தில், கழக அவைத் தலைவர் டாக்டர் அ. தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

கழக செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு அனுப்பப்படும் அழைப்பிதழுடன் தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
AIADMKDecemberedappadi palaniswamiexecutive committeegeneral committeemeeting
Advertisement
Next Article