Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பாமக நிறுவனர் ராமதாஸ் உடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி சந்திப்பு!

10:55 AM Feb 06, 2024 IST | Web Editor
Advertisement

பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும், ஏப்ரல் மாதத்தில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தொடங்கிவிட்டன. இதனால் நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, நாதக, பாஜக ஆகிய 4 அணிகள் இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. பல்வேறு கட்சிகள் தேர்தலுக்கான கூட்டணி குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், நேற்று இரவு திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி நேரில் சந்தித்து பேசியுள்ளார். கூட்டணி அமைத்து போட்டி என ராமதாஸ் பேசிய நிலையில், ராமதாஸ் - சி.வி.சண்முகம் சந்திப்பு கவனம் ஈர்த்துள்ளது. இந்த சந்திப்பு கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் பாமக போட்டியிட தர்மபுரி, அரக்கோணம், மத்திய சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 8 தொகுதிகளை கேட்தாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சுவார்த்தையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பில் அதிமுக, பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக நேற்றைய தினம் டெல்லியிலிருந்து வருகை புரிந்து ராமதாசை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அவரது இல்லத்தில் உணவருந்திவிட்டு மீண்டும் இரவே டெல்லி சென்றாக தகவல் வெளியாகியுள்ளன. பாமக சார்பில் 8 தொகுதிகளை கேட்டுள்ளதில் ஒரு ராஜ்யசபா தொகுதியை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
#tindivanamADMKAIADMKCve Shanmugamelection 2024Election2024News7Tamilnews7TamilUpdatesPMKRamadoss
Advertisement
Next Article