Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக கவுன்சிலர்கள் தாக்கப்பட்ட வழக்கு - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுதலை!

02:11 PM Jan 10, 2025 IST | Web Editor
Advertisement

கடந்த 2022ஆம் ஆண்டில் சென்னை மாமன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்களை தாக்கிய வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உட்பட 7 பேரை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

கடந்த 2002ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், திமுக சார்பாக கண்ணப்பர் திடல் மீன் அங்காடி தொடர்பான டெண்டர் பிரச்சனை எழுப்பப்பட்டது. அப்போது திமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்களிடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில், அது ஒரு கட்டத்தில் நேரடி மோதலாக மாறியது. அப்போது அங்கிருந்த மைக், நாற்காலிகள் உள்ளிட்டவை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டன.

இந்த தாக்குதலில் அதிமுகவின் பரிமளா, ஜீவரத்தினம், குமாரி உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுகவின் மாமன்ற செயலர் ரீட்டா சார்பாக திமுக கவுன்சிலர்களான மா.சுப்பிரமணியன், சிவாஜி, தமிழ்வேந்தன், நெடுமாறன், மூர்த்தி, வி.எஸ்.பாபு, செல்வி, சௌந்தர்யா உள்ளிட்ட 7 பேர்மீது பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இவர்கள் 7 பேர்மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக 2019ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 70 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு எம்பி, எம்எல்ஏ-க்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த சூழலில், இன்று நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக கவுன்சிலர்களை தாக்கிய வழக்கில் இருந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க படவில்லை என்பதால் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார். 22 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கில், அவரை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags :
ADMK CouncilersDMKminister subramanianRelease
Advertisement
Next Article