Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க AI - மத்திய அமைச்சர் #NitinGadkari பேச்சு!

08:08 AM Oct 25, 2024 IST | Web Editor
Advertisement

போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Advertisement

டெல்லியில் நேற்று நடைபெற்ற 12வது போக்குவரத்து உள்கட்டமைப்பு தொழில்நுட்பக் கண்காட்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது,

“இந்தியாவின் சாலைப் பாதுகாப்பில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க அரசு, தனியார் மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 5 லட்சம் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுகின்றன. பெரும்பாலும் 18 முதல் 36 வயதுக்குள்பட்டவர்களே இதில் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளால் ஏற்படும் பொருளாதார இழப்பீடு, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3% ஆக உள்ளது.

மேம்பட்ட பொறியியல் தீர்வுகள், சட்டங்களைச் செயல்படுத்துதல் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிநவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்காமல் சாலைப் பாதுகாப்பை அடைய முடியாது. தொழில்நுட்பத் தீர்வுகளை மேம்படுத்துவதில் தனியார் துறையைச் சோ்ந்த நிபுணர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களின் முன்மொழிவுகளை மதிப்பீடு செய்து, சிறந்த திட்டங்கள் செயல்படுத்துவதை இந்த பிரத்யேக நிபுணர் குழு உறுதி செய்யும். விரைவான மேம்பாடுகளை இலக்காகக் கொண்டு மூன்று மாதங்களுக்குள் இந்தக் குழுவின் மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும்.

சுங்கச்சாவடி வசூலில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் செயற்கைக்கோள் கட்டண அமைப்புகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. கேமராக்கள் போன்ற கண்காணிப்புத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், உயர் தரத்தைப் பராமரிக்க அரசு உறுதி பூண்டுள்ளது. இதில், எந்தவொரு நிறுவனத்திடமிருந்து தீர்வுகள் வந்தாலும், தரம் மற்றும் தரநிலைகளில் சமரசம் செய்யப்படாது.

புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்ட சிறிய நிறுவனங்கள் அரசாங்க ஏலங்களில் பங்கேற்கின்றன. அவை, லாப வரம்புகளைப் பராமரிக்கும் அதே வேளையில் செலவு மற்றும் செயல்திறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன. இதுபோன்ற சிறந்த தொழில்நுட்பங்கள் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும் மற்றும் சாலை பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த முடியும்” இவ்வாறு தெரிவித்தார்.

Tags :
Advanced TechnologyDelhiNews7Tamilroad safetyTraffic violation
Advertisement
Next Article