கூகுள் மேப்பில் அறிமுகமாகும் AI தொழில்நுட்பம் - ரசனைக்கேற்ப இனி Suggestion கிடைக்கும்!
கூகுள் மேப்பில் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு அம்சம், பயனர்களின் ரசனைக்கு ஏற்ற முடிவுகளை உடனுக்கு உடன் வழங்கும்படி அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் மேப்ஸ் மக்களின் வாழ்க்கையை மிகவும் எளிதானதாக மாற்றி விட்டது. இண்டர்நெட் உதவியுடன் பயணம் நமக்கு மிகவும் சௌகரியமானதாக மாறிவிட்டது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்கள் செல்ல நினைக்கும் இடத்தை தேடினால் மட்டும் போதும். உங்களுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் கிடைத்துவிடும்.
இந்த சேவை உலகம் முழுவதும் உள்ள லொகேஷன்கள் மற்றும் பகுதிகளின் விரிவான தரவுகளை வழங்குகிறது. நிலையான சாலை வரைபடங்களுடன் Google Maps பல்வேறு இடங்களில் சாட்டிலைட் மற்றும் ஏரியல் புகைப்படங்களை வழங்குகிறது. இன்னும் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் அங்குள்ள டிராஃபிக் போன்றவை முதற்கொண்டு நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் 250 மில்லியன்களுக்கு மேலான இடங்கள் குறித்த தகவல்களை கூகுள் மேப்பில் ஸ்டோர் செய்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.