For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வடகிழக்கு மாநிலத்தின் முதல் AI ஆசிரியை - அசாமின் புதிய முயற்சி!

05:00 PM May 27, 2024 IST | Web Editor
வடகிழக்கு மாநிலத்தின் முதல் ai ஆசிரியை   அசாமின் புதிய முயற்சி
Advertisement

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராயல் குளோபல் பள்ளி வடகிழக்கு மாநிலங்களின் முதல் AI ஆசிரியையான  'ஐரிஸ்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 

Advertisement

செயற்கை நுண்ணறிவு (AI) நமது சமூகத்தின் பல்வேறு அம்சங்களை முற்றிலும் மாற்றி வடிவமைக்கும் ஆற்றலைக் கொண்ட ஒரு சிறப்பான தொழில்நுட்பமாகும்.  இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி  பல்வேறு துறைகளில் அதிக வேகமாக நடந்து வருகிறது.

இந்த தொழில்நுட்பத்தால் மனிதர்களை போல சிந்திக்கவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் செயல்படவும் முடியும் என கூறப்படுகிறது.  AI கருவிகளின் உதவியுடன் மக்களை கவரும் விதமாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கபடுகின்றன.  காலப்போக்கில்,  இது நம் வாழ்வின் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும்,  மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில்,  அமெரிக்காவில் 18 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை செயற்கை நுண்ணறிவு (AI) பேச உதவியுள்ளது.  இந்நிலையில், இது மருத்துவ துறையில்  மிக பெரிய அதிசயமாக பார்க்கப்படுகிறது.  இது போன்ற பல துறைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது பல வித்தயாசமான அதிசயங்களை படைத்துள்ளது.

கேரளாவில் அறிமுகப்படுத்தப்பட்ட AI ஆசிரியர்

இப்போது,  ​​கேரளாவில் உள்ள ஒரு பள்ளி,  கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்தவும்,  கற்றலை சிறப்பாக்கவும்,  மாணவர் ஈடுபாட்டை அதிகரிக்க  AI தொழில்நுட்பத்தை தேர்வு செய்துள்ளனர். இதனிடையே கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள,  கடுவாயில் தங்கல் அறக்கட்டளையின் KTCT மேல்நிலைப் பள்ளியில் ஒரு புதிய முயற்சியாக கடந்த பிப்ரவரி மாதம் AI ஆசிரியை அறிமுகப்படுத்தப்பட்டார்.

இந்த கல்வி நிறுவனம் மேக்கர்லேப்ஸ் எடுடெக் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து “ஐரிஸ்” என்ற ஏஐ ஆசிரியரை உருவாக்கியது.  இந்த கண்டுபிடிப்பின் மூலம் இந்தியாவின் முதல் AI ஆசிரியை ரோபோ இது என்ற பெருமையை பெற்றது.  இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ராயல் குளோபல் பள்ளியானது வடகிழக்கு மாநிலங்களின் முதல் AI ஆசிரியரான 'ஐரிஸ்' ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

அந்த AI ஆசிரியை அசாமின் பாரம்பரிய உடையான மேகேலா-சாடோர் உடையணிந்து,  மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை கவர்ந்தார்.  ஹீமோகுளோபின் பற்றிய ஒரு மாணவரின் கேள்விக்கு, AI ஆசிரியையின் பதில் சிறப்பான வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

அவர் விரிவான விளக்கத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல் எடுத்துக்காட்டுகள் மற்றும் குறிப்புகளையும் இணைத்து பதிலளித்துள்ளார்.  கைகுலுக்கல் போன்ற சைகைகளையும் நிகழ்த்தியுள்ளார்.  இதனால் அங்குள்ள மாணவர்களின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு அதிகரித்தாக கூறப்படுகிறது.  

Tags :
Advertisement