For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Ahmedabad | ஓலா ஓட்டுநராக கவனம் ஈர்த்த பெண்!

03:09 PM Aug 19, 2024 IST | Web Editor
 ahmedabad   ஓலா ஓட்டுநராக கவனம் ஈர்த்த பெண்
Advertisement

கணவரின் உடல்நல பிரச்னை காரணத்தால் 6 மாதங்களுக்கு முன்பு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாத பெண், தற்போது ஓலா வாடகை கார் ஓட்டுநராக தனது நேர்த்தியான திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இவரது செயல் கவனம் பெற்றுள்ளது.

Advertisement

சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட தலைநகரங்களில் மக்களுக்கான கார் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. இதனால் சாலைகளில் பெரும்பாலும் வாடகை கார்களை அதிகமாக காண முடியும். இந்த வாடகை கார்களில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ஓட்டுநர்களாக பணிபுரிகின்றனர். அந்த வகையில் ஒரு பெண் ஓட்டுநர் குறித்து ஓஜாஸ் தேசாய் என்பவர் பதிவிட்டுள்ள பதிவை பற்றி காணலாம்.

ஓஜாஸ் தேசாய் சமீபத்தில் அகமதாபாத் பகுதியில் ஓலா கேப் ஒன்றை புக் செய்துள்ளார். ரயில் நிலையம் செல்வதற்காக கேப் புக் செய்ய அதில் அர்ச்சனா பாட்டீல் என ஒரு பெண் ஓட்டுநரின் பெயர் வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். பொதுவாக பெண்கள் ஆட்டோவை அதிகம் இயக்குவது தெரிந்த ஓஜாஸ் தேசாய்க்கு கேப் ஓட்டுநராக ஒரு பெண் இருப்பது வியப்பாக இருந்துள்ளது. அதே போல அர்ச்சனா பாட்டில் டிராபிக் நெரிசலுக்கு மத்தியில் சிறப்பாக வண்டி ஓட்டிய விதமும் ஓஜாஸ் தேசாயை அசர வைத்துள்ளது.

மேலும் அந்த பெண் 6 மாதங்களுக்கு முன் சைக்கிள் கூட ஓட்ட தெரியாமல் இருந்ததாகவும் பின்னர் கார் ஓட்ட கற்றுக் கொண்டு இப்போது தேர்ந்த ஓட்டுநராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அர்ச்சனா பாட்டிலின் கணவர் ஓட்டுநராக இருந்த சூழலில் உடல்நல பிரச்னைகள் உருவானதால் அவரால் தொடர்ந்து வாகனம் ஓட்ட முடியவில்லை. இதனால் வாங்கிய கடன் தலைக்கு மேல் இருக்க அவரது கணவரிடம் இருந்து அர்ச்சனா பாட்டில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு குடும்பத்தையும் நடத்தி வருகிறார்.

இதுகுறித்த செய்தியை பகிர்ந்த ஓஜாஸ் தேசாய், ஒரு பெண்ணின் வலிமை என்ன என்பதை தெரிவிப்பதற்காக இந்த செய்தியை பகிரவில்லை என்றும் கெட்ட நேரத்தை தோல்வியாக பார்க்காத ஒரு நல்ல மனிதரை சந்திக்க நேர்ந்தது பற்றி எழுதியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். குடும்ப பாரத்திற்காக கணவரின் இடத்தில் இருந்து கேப் ஓட்டுனரின் இந்த அர்ப்பணிப்பு பலரது கவனத்தை ஈர்த்ததுடன், வாழ்த்தவும் வைத்துள்ளது.

ஓஜாஸ் தேசாய் பகிர்ந்துள்ள பதிவில் ஒரு நபர், “வாழ்க்கை கடினமாக உள்ளது என்று நாம் நினைக்கும் போது நம்மை விட வலிகள் நிறைந்த ஒருவரின் வாழ்க்கையை நாம் கடக்கும் போது நம்முடையது கஷ்டமே இல்லை என தோன்றும்” என கமெண்ட் செய்துள்ளார்.

Tags :
Advertisement