For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்!

08:09 PM Jan 14, 2024 IST | Web Editor
பொங்கலை முன்னிட்டு சித்தர்காடு கருவாட்டு சந்தையில் குவிந்த பொதுமக்கள்
Advertisement

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் செயல்படும் புகழ்பெற்ற சித்தர்காடு கருவாட்டு சந்தையில், மாட்டுப் பொங்கல் அன்று முன்னோருக்கு படையலிட ஏராளமான பொதுமக்கள் கருவாடு வாங்க சந்தையில் குவிந்தனர். 

Advertisement

மயிலாடுதுறை அருகே புகழ் பெற்ற சித்தர்காடு சந்தை அமைந்துள்ளது. சுமார் 200
ஆண்டுகளாக இந்த சந்தை செயல்பட்டு வருகிறது. கருவாட்டுக்கு என்று பிரத்தியேகமான
சந்தை இதுவாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் தரங்கம்பாடி, பூம்புகார், வானகிரி
திருமுல்லைவாசல் உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும்
கருவாடுகள் சித்தர்காடு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால் இதற்கு சித்தர்காடு
கருவாடு சந்தை என்று பெயர்.

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த கருவாட்டு சந்தை நடைபெறும். இங்கு  கருவாடு மட்டுமன்றி பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், வீட்டு உபயோக பொருட்கள் போன்றவை மண் வாசனை மாறாமல் இங்கே கிடைக்கும். மேலும், ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெறும். அந்த வகையில், இன்று
நடைபெற்ற சிறப்பு சந்தையில் கிழங்கா, ஓட்டம்பாறை கெலுத்தி, நெத்திலி,
சென்னாங்குன்னி, பேத்தை திருக்கை சுறா தோவாப்பொடி, மொத கெண்டை உள்ளிட்ட
நூற்றுக்கும் மேற்பட்ட கருவாட்டு வகைகள் விற்பனை செய்யப்பட்டன.

இவை கிலோ ஒன்றிற்கு 100 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது.  மாட்டுப்பொங்கல் அன்று முன்னோர்களுக்கு படையல் இடுவதற்காக திரளான பொதுமக்கள் கருவாட்டு சந்தையில் பொருட்களை வாங்கி சென்றனர். இன்று ஒரு நாளில் மட்டும் பல லட்ச ரூபாய் வியாபாரம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement