பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களால் நிரம்பி வழியும் தாம்பரம் ரயில் நிலையம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்ததால், அனைத்து பிளாட்பாரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பண்டிகை நாட்களன்றும், தொடர் விடுமுறைகளின் போதும் சென்னையில் வாழும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தாம்பரத்திலிருந்து தென்
மாவட்டங்களுக்கு இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி வரை
செல்லும் இந்த சிறப்பு ரயிலில் செல்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இன்று தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
மேலும், சென்னை எழும்பூரில் இருந்து, தாம்பரம் வழியாக தென் மாவட்டங்களுக்கு
செல்லும் ரயில்களிலும் ஏறுவதற்காக தாம்பரம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்தனர். இதனால், தாம்பரத்தின் அனைத்து பிளாட்பார்மங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால், தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகினர்.