அறிமுக போட்டியிலேயே அதிரடி ஆட்டம் - புதிய சாதனை படைத்த தென்னாப்பிரிக்க வீரர்!
பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய மூன்று அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பாக்கிஸ்தான் அணிகள் மோதியது. இதில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்த நிலையில் இன்று(பிப்.10) நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதியது. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர் முடிவில் 304 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர்கள் கேன் வில்லியம்ஸ் (133*), டெவன் கான்வே (97) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 48.4 ஓவரில் 308 ரன்களை நியூசிலாந்து அணி குவித்து, தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடிய 26 வயதுடைய அறிமுக வீரர் மேத்யூ பிரெட்ஸ்கீ, 148 பந்துகளில் அதிரடியாக 11 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் அடித்து 150 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் அவர் அறிமுக போட்டியிலேயே அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார். முன்னதாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர் 148 ரன்களை எடுத்து முதலிடத்தில் இருந்தார். இந்த நிலையில் அவரின் சாதயை மேத்யூ பிரெட்ஸ்கீ முறியடித்துள்ளார்.