"நேருவுக்குப் பிறகு 3-வது முறையாக பிரதராவது மோடி மட்டும் அல்ல" - ஜெய்ராம் ரமேஷ்
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டும் அல்ல என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது,
“இந்தியாவில் உள்ள பிரதமர்களில் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, தொடர்ந்து 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க போவதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஒரு கட்சியை வழி நடத்தி 240 இடங்களில் வெற்றிபெறச் செய்வது மட்டும், ஒரு பிரதமரின் வேலை அல்ல.
அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ச்சியாக 1952ம் ஆண்டில் 364 இடங்களிலும், 1957ம் ஆண்டு 371 இடங்களிலும், 1962 ம் ஆண்டில் 361 இடங்களிலும் வெற்றி பெற்றார். போட்டியிட்ட அனைத்து முறையும் மூன்றில் இரண்டு பங்கு தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்தார். ஆயினும் அவர் தன்னை ஒரு ஜனநாயகவாதியாகவும், நாடாளுமன்றத்தை மிகவும் கவனமாக, நிலையான இருப்பில் வைத்திருந்தார்.
ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ச்சியாக 3 முறை பிரதமாக பதவியேற்கப் போகும் ஒரே மனிதர் நரேந்திர மோடி மட்டும் அல்ல. நேருவைத் தொடந்து இந்திரா காந்தி, 1966, 1967, 1971 மற்றும் 1980 ஆகிய ஆண்டுகளில் 4 முறை பிரதமராகவும், அடல் பிஹாரி வாஜ்பாய், 1996, 1998 , 1999 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பிரதமராகவும் பதவியேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பரிதாபகரமான தேர்தல் நிலையை நியாயப்படுத்த என்னவேண்டுமானலும் சொல்லி அவர்கள் தம்பட்டம் அடித்துக்கொள்ளவார்கள்” என தெரிவித்துள்ளார்.
The drumbeat to find silver linings in the mandate that has been a moral, political, and personal defeat for Narendra Modi has started.
It is being propagated that Mr. Narendra Modi is the first to receive a mandate thrice in a row after Jawaharlal Nehru.
How leading a party to…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 8, 2024