“அரை நூற்றாண்டுக்கு பின், சென்னம்பட்டிக் கால்வாயில் ஆர்ப்பரித்த ஆற்று நீர்!” - அமைச்சர் #Thangamthenarasu பெருமிதம்!
அரை நூற்றாண்டுக்கு பின், சென்னம்பட்டிக் கால்வாயில் நீர் ஆர்ப்பரித்து செல்வதாக அமைச்சர் #Thangamthenarasu பெருமிதம் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் விவசாய பெருங்குடி மக்கள் அதிகம் வாழும் பகுதியாகும். இங்கு சென்னம்பட்டி அணைக்கட்டு திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் உரிய நேரத்தில் பணிகள் நிறைவடையாமல் இருந்ததால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இதனனையடுத்து விவசாய மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சென்னம்பட்டி அணைக்கட்டு கனவுத் திட்டம் குறித்து சட்டமன்றத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். இந்நிலையில் அமைச்சரின் கோரிக்கையை ஏற்றுத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி நீர்வளத்துறை மானிய கோரிக்கையிலிருந்து இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது.
இதையும் படியுங்கள் : INDvBAN டி20 | சூர்யகுமார் யாதவ் – சஞ்சு சாம்சன் அசத்தல் ஆட்டம்…வங்கதேச அணிக்கு 298 ரன்கள் இலக்கு!
இதனையடுத்து சுமார் 15 கோடி செலவிட்டில் தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. முன்னதாக கடந்த மாதம் "சென்னம்பட்டி அணைக்கட்டு - வலது கால்வாயை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இத்திட்டத்தினால் காரியாபட்டி, மல்லாங்கிணறு பகுதிகளில் உள்ள 19 கண்மாய்களுக்கு நீர் கிடைக்கும் என தெரிவிக்கபட்டது.
இதன் மூலம் 746.62 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று விவசாய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற வழி வகுப்பதற்காக தொடங்கப்பட்டது. தொடர்ந்து சென்னம்பட்டி வலது கால்வாயில் சென்னம்பட்டியில் இருந்து மல்லாங்கிணறு வரை செல்லும் இந்த கால்வாயில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நீர்வரத்து வருவதை அமைச்சர் தங்கம் தென்னரசு மலர் தூவி வரவேற்று நீர்வரத்தினை ஆய்வு செய்தார். ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்குப் பிறகு நந்திக்குண்டு பகுதிகளில் கால்வாயில் தண்ணீர் வருவதை அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டாடி மகிழ்ந்தனர். இது தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.