Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

”அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது!” - ஹெச்.ராஜா

அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
06:46 PM Jul 15, 2025 IST | Web Editor
அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால் திமுகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விமர்சித்துள்ளார்.
Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தில் பாஜக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisement

”திமுக கூட்டணி கலகலத்து போய் இருக்கிறது. அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பிறகு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது.அதனால் அதிமுகவை பாஜக கபுளிகரம் செய்து விடும் என கூறி வருகின்றனர். திமுகவுடன் நாங்கள் கூட்டணியில் இருந்தோம் அந்த கட்சியை கபிளிகரம் செய்து விட்டோமா? காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூடா நட்பு கேடாய் முடியும் என கூறினார். அப்படிப்பட்ட கூட்டணியில் காங்கிரஸ் கட்சி ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

மக்கள் நலக்கூட்டணியை வைத்துக்கொண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மிக கேவலமாக பேசினார்கள். ஆனால் தற்போது கூட்டணியில் தொடர்கிறார்கள். திமுகவினருக்கு பயம் தொற்றி கொண்டதால் உளறிக்கொண்டிருக்கின்றனர்.குழந்தைகளை போதைக்கு அடிமை ஆக்காமல் காப்பாற்றப்பட வேண்டியது கடமையாக உள்ளது. அதனால் திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Tags :
AmitShahDMKElectionH.RajalatestNewsTNnews
Advertisement
Next Article