For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

17 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடைபெற்ற கண்டதேவி கோயில் தோரோட்டம்!

10:49 AM Jun 21, 2024 IST | Web Editor
17 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடைபெற்ற கண்டதேவி கோயில் தோரோட்டம்
Advertisement

17 வருடங்களுக்கு பிறகு கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தேர்த்திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. 

Advertisement

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில்,  சிவகங்கை சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சொர்ணமூர்த்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆனிமாதத்தில் நடைபெறும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும்.  இந்த தேரோட்டம் சிவகங்கையை சுற்றியுள்ள 170 கிராமங்களிலும் பிரபலமாகும்.

இந்நிலையில் கடந்த 1998 ஆம் ஆண்டு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை
காரணமாக தேரோட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.  இதனை தொடர்ந்து மாவட்ட
நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையால் 2002 முதல் 2006 வரை பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் மாவட்ட நிர்வாகமே முன் நின்று தேரோட்டத்தை நடத்தியது. இதனையடுத்து கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தேரோட்டம் நிறுத்தபட்டு கடந்த 2012ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதனிடையே கோயில் தேர் பழுதடைந்து மீண்டும் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

தேர் புதுப்பிக்கப்பட்டும் தேரோட்டம் நடத்தப்படாததால் கண்டதேவி ஊர் முக்கியஸ்தர்கள் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில்,  தேரோட்டம் நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடுத்தனர்.  இதனையடுத்து உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் நடத்திய சமாதான கூட்டத்தில், அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்த்து தேரோட்டம் நடத்த முடிவானதையடுத்து இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கோயிலை சுற்றி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர்
தூரம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது.  தேரோட்டத்தை முன்னிட்டு தென் மண்டல ஐஜி கண்ணன் தலைமையில்,  5 டிஐஜி ,12 எஸ்பி உட்பட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கண்டதேவியை சுற்றிலும் 18 சோதனை சாவடிகள், 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு
கேமராக்கள் பொருத்தப்பட்டு விரிவானபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement