For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

28 ஆண்டுகளுக்கு பிறகு… #AFGvsZIM பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி!

01:21 PM Oct 30, 2024 IST | Web Editor
28 ஆண்டுகளுக்கு பிறகு…  afgvszim பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி
Advertisement

ஆப்கானிஸ்தான் - ஜிம்பாப்வே இரு அணிகளுக்கிடையே 26 ஆண்டுகளுக்கு பிறகு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

Advertisement

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஆப்கானிஸ்தான் அணிக்கு வெளியில் மேற்கொள்ளும் முக்கிய சுற்று பயணமாக இது அமைந்திருக்கிறது.

இந்த தொடரின் டி20 போட்டிகள் டிசம்பர் 9, 11, 12 தேதிகளிலும், ஒருநாள் போட்டிகள் டிசம்பர் டிசம்பர் 15, 17, 19 தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணியின் இந்த சுற்றுப்பயணத்தில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கூடுதலாக இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் சேர்க்க விருப்பம் தெரிவித்தது. இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் சம்மதம் தெரிவித்திருக்கிறது.

இதையும் படியுங்கள் : “தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாகக் கொண்டு செயல்பட்டவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்” – #EPS புகழாரம்!

அதன்படி, கிறிஸ்துமஸ் மறுநாள் (டிசம்பர் 26) பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இரு அணிகளும் மோத உள்ளன. தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி 2வது டெஸ்ட் போட்டியும் நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக ஜிம்பாபே அணி சொந்த மண்ணில் 1996 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி விளையாடியது. இந்நிலையில், 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சொந்த மண்ணில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது.

Tags :
Advertisement