ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் - உயிரிழப்பு எண்ணிக்கை 1,100-ஆக அதிகரிப்பு!
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான குனார் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.47 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமானது. இரவில் ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் ஏராளமானவர்கள் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர்.
இதனிடையே 800க்கும் மேற்பட்டோர் நிலநடுக்கத்தால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் 2500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்பட்டது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,100-ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,500 பேர் காயமடைந்துள்ளதாக ஊடக மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் அப்துல் ஜப்பார் பெஹிர் தெரிவித்துள்ளார்.