For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து - உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு!

ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்தில் சிக்கி 79 அகதிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
09:56 AM Aug 21, 2025 IST | Web Editor
ஆப்கானிஸ்தானில் பேருந்து விபத்தில் சிக்கி 79 அகதிகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து   உயிரிழப்பு எண்ணிக்கை 79 ஆக அதிகரிப்பு
Advertisement

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர், மேற்காசிய நாடான ஈரானில் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்தனர். இதனிடையே ஈரானில் தஞ்சமடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை ஈரான் வெளியேற்றி வருகிறது.

Advertisement

இந்த நிலையில் அவர்களில் சிலர் பேருந்து மூலமாக நாடு கடத்தப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணம் அருகே பேருந்து சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டிரக் மற்றும் பைக் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எறிந்துள்ளது.

இதில் 19 குழந்தைகள் உள்பட 79 அகதிகளும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement