Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைக்க கோரிக்கை!" - வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உச்சநீதிமன்றத்தில் மனு!

09:08 PM Aug 10, 2024 IST | Web Editor
Advertisement

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 120அடியாக குறைத்து உத்தரவிட கோரி வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisement

இது தொடர்பாக வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது :

"முல்லைப்பெரியாறு அணை மிகவும் பழமையான அணை. இது பாதுகாப்பற்ற சூழலில் உள்ளது. இந்த அணை உடைந்தால் கேரள பகுதியில் ஆலப்புழா, எர்ணாகுளம் கோட்டயம் பகுதியில் வாழும் மக்களின் உயிருக்கு ஆபத்தாக முடியும். எனவே இந்த அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக வைக்கக்கூடாது, அதனை 120 அடியாக குறைத்து நீரை தேக்க உத்தரவிட வேண்டும்.

இதையும் படியுங்கள் : வயநாடு நிலச்சரிவு : “கேரள அரசுடன் மத்திய அரசு துணை நிற்கும்!” – பிரதமர் மோடி உறுதி

ஏனெனில் முன்னதாக இந்த அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்த போதிலும், அதனை கேரள அரசு முழு மனதுடன் ஏற்கவில்லை. இந்த விவகாரம் மக்களின் உயிர் சார்ந்த விவகாரம் என்பதால், முல்லைப்பெரியாறு அணையில் 120 அடிக்கு மேல் நீரை தேக்கக்கூடாது என தமிழ்நாடு, கேரளா என இரு மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும்.மேலும் இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு ஏற்பட புதிய அணை கட்ட வேண்டும்.  இந்த வழக்கில் மனுதாரரான தாங்களே நேரில் ஆஜராகி (party-in-person) வாதிட அனுமதி வழங்க வேண்டும்" இவ்வாறு வழக்கறிஞர் மேத்யூ நெடும்பரா உள்ளிட்ட 4 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags :
advocateMathew NedumbaraMullaiperiaru damPetitionreduceSupreme courtwater level
Advertisement
Next Article