For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இளம் பருவத்தினரின் உடல் பருமன் விகிதம் 4 மடங்கு உயர்வு - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

11:42 AM Mar 02, 2024 IST | Web Editor
இளம் பருவத்தினரின் உடல் பருமன் விகிதம் 4 மடங்கு உயர்வு   அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு
Advertisement

இளம் பருவத்தினரின் உடல் பருமன் விகிதம் 4 மடங்கு உயர்ந்துள்ளதாக 'தி லான்செட்' வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Advertisement

உலக அளவில் 2022 ஆம் ஆண்டில் உடல் பருமனால் வாழும் குழந்தைகளின் எண்ணிக்கை 100 கோடியை கடந்துள்ளதாக 'தி லான்செட்' ஆய்வு நடத்தி ஆதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.  ஊட்டச்சத்து குறைபாடு காரணத்தால் குழந்தைகள் உடல் பருமன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்  'தி லான்செட்' ஆய்வில் தெரிவித்துள்ளது.  5 முதல் 19 வயதுக்குட்பட்ட 12.5 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.  அதில், 7.3 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 5.2 மில்லியன் பெண்கள் என்று தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள் : பெங்களூரு குண்டுவெடிப்பு | சிசிடிவியில் சிக்கிய சந்தேக நபர்...

பெரியவர்களில் உடல் பருமன் விகிதம் இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் மற்றும் குழந்தைகள்,  இளம் பருவத்தினரிடையே நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே,  உடல் பருமன் விகிதம் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில், 1990 ஆம் ஆண்டில் 1.2 சதவீதத்தில் இருந்த பெண்கள் உடல் பருமன் விகிதம் 2022 ஆம் ஆண்டு 9.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.  இதை போல,  ஆண்களுக்கு 0.5 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் முலம்
2022 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 44 மில்லியன் பெண்களும்,  26 மில்லியன் ஆண்களும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, "உடல் பருமன் என்பது அசாதாரணமானது அல்ல. இது உடல்நலனுக்கு அபாயங்களை ஏற்படுத்தும்.  உடல் நிறை குறியீட்டெண் (BMI) 25 க்கு மேல் இருந்தால் உடல் பருமன் கொண்டதாக கருதப்படுகிறது" என தெரிவித்துள்ளனர்.
BMI கணக்கீடு மூலம் 1990 முதல் 2022 வரையில் உடல் பருமன் விகிதத்தில் ஆய்வு  செய்யப்பட்டுள்ளது.  மேலும், உலகம் முழுவதும் சுமார் 190 நாடுகளில் சுமார் 1,500 ஆய்வாளர்கள் இந்த பணியை மேற்கொண்டுள்ளனர்.

Tags :
Advertisement