Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

12:01 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி சென்னையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம்  நடைபெற்றது.  அதில் கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன.  இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியை சார்ந்த வைத்திலிங்கம்,  மனோஜ் பாண்டியன்,  ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Advertisement

இதையும் படியுங்கள் : மக்களவை தேர்தல் பணிகளை தொடங்கிய திமுக! கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைப்பு!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்ளிட்ட நால்வரும் உயர்நீதிமன்ற டிவிசன் அமர்வில் மேல்முறையீடு செய்தனர்.  இந்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து தீர்ப்பளித்த சென்னை உயரநீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என தீர்ப்பளித்து.

மேலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா,  எஸ்.வி.என்.பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி விசாரித்தது.  பின்னர் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில்,  இந்த வழக்கு இன்று (ஜன. 19 ) நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஓ.பி.எஸ் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது,

"கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் தான் பொதுச்செயலாரை தேர்வு செய்ய முடியும். ஆனால் தன்னிச்சையாக எடப்பாடி தரப்பு முடிவு செய்து பொதுச்செயலாளர் பதவியை முடிவு செய்து விட்டனர்.  மேலும், சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஓ.பி.எஸ்-ஐ கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர்.  இந்த விவகாரத்தில் பொதுக்குழு தீர்மானத்துக்கு தடை விதிக்க வேண்டும்"  என தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள்: "பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் தலையிட முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எப்படி தடைவிதிக்க முடியும் என கேள்வி எழுப்பியது. ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள சிவில் விவகார வழக்குகளை விரைவில் விசாரிக்க வேண்டும் என தெரிவித்தது.  மேலும், வழக்கை விசாரித்த நீதிபதிகள் மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Tags :
AIADMKappealdismissedgeneral committeeissueOPSSupreme court
Advertisement
Next Article