For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#ADMK 53-வது தொடக்க விழா | தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்!

12:57 PM Oct 17, 2024 IST | Web Editor
 admk 53 வது தொடக்க விழா   தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கொண்டாட்டம்
Advertisement

அதிமுக-வின் 53வது தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அக்கட்சியினர் கொண்டாடினர்

Advertisement

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி அதிமுக -வை தொடங்கினார். அதிமுக தொடங்கப்பட்ட தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்கட்சியினர் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் இன்று அதிமுக -வின் 53-வது ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கட்சியினரால் கொண்டாடப்பட்டது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் அதிமுக முன்னணி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

அதிமுக தலைமை அலுவலகம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் 53-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்த பிரமாண்ட கொடி கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணியினர் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருஉருவ சிலைக்கு செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ வுமான தனபால் மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, அதிமுக கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

இதையும் படியுங்கள் : #SupremeCourt புதிய தலைமை நீதிபதியாகிறார் சஞ்சீவ் கன்னா | யார் இவர்?

காஞ்சிபுரத்தில் அதிமுகவின் 53-வது தொடக்க விழா

காஞ்சிபுரத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமையில் கொடியேற்றி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின்
புகைப்படங்களுக்கு மலர் தூவி பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
Advertisement