Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி!

அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
09:04 AM Apr 15, 2025 IST | Web Editor
Advertisement

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இதனையடுத்து, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கூட்டணி அறிவிப்பை அடுத்து தமிழ்நாடு முழுவதும் சட்டப்பரேவை தேர்தல் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

Advertisement

இதையும் படியுங்கள் : அரக்கோணம் | இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞர்கள் மூவர் உயிரிழப்பு!

அதன்படி, திண்டுக்கலில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார். இந்த நிலையில், சென்னையில் உள்ள திண்டுக்கல் சீனிவாசன் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் உணவு ஒவ்வாமை காரணமாக சென்னை கீரீம் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிகிச்சைக்கு பிறகு அவர் உடல்நலம் குறித்த தகவல் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ADMKAIADMKChennaiDindigul Sreenivasanhospitalnews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article