For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி: மத்திய அரசு அறிவுரை!

03:10 PM Feb 26, 2024 IST | Web Editor
6 வயது பூர்த்தியானால் மட்டுமே 1ம் வகுப்பில் அனுமதி  மத்திய அரசு அறிவுரை
Advertisement

குழந்தைகளுக்கு 6 வயது ஆன பிறகே 1-ம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

தேசிய கல்வி கொள்கை - 2020 அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும், பிற மாநிலங்களில் இந்த கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி, 5-3-3-4 என்ற அடிப்படையில் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது, அங்கன்வாடி முதல் 2-ம் வகுப்பு வரை (3-8 வயது) 5 ஆண்டுகள், 3 முதல் 5-ம் வகுப்பு வரை (8-11 வயது) 3 ஆண்டுகள், 6 முதல் 8-ம் வகுப்பு வரை (11-14 வயது) 3 ஆண்டுகள், 9 முதல் 12-ம் வகுப்பு வரை (14-18 வயது) 4 ஆண்டுகள் என 4 நிலைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை 6 வயதில் தொடங்கினால் தான், அடுத்தடுத்த படிநிலைகள் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில், அனைத்து பள்ளிகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

புதிய சேர்க்கை நடைபெறும் 2024-25 அமர்வு விரைவில் தொடங்க உள்ளது.  மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் 1-ம் வகுப்பு சேர்க்கைக்கு வயது 6+ ஆக சீரமைக்கப்பட்டுள்ளது என மத்திய கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிப் படிப்பை தொடங்குவதற்கு முன்பு குழந்தைகளின் வளர்ச்சிக்கான தயார் நிலையை கருத்தில் கொண்டு இந்த வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 வயதில் தான் குழந்தைகள் அறிவாற்றல் மற்றும் சமூக வளர்ச்சியின் புதிய, முக்கியமான கட்டத்தில் இருப்பார்கள். அந்த வயதில் பள்ளிப் படிப்பை தொடங்கினால், கற்றல் நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு போல, டெல்லி, ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் 5 வயதில் தான் 1-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. கர்நாடகா, கோவாவில் 5 வயது 10 வயதில் சேர்க்கை நடைபெறுகிறது. உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் தற்போது 6 வயதில்தான் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

நடப்பு கல்வி ஆண்டில் தேசிய கல்வி கொள்கை அடிப்படையில் 3, 4, 5-ம் வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement