For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஆதித்யா எல்-1 விண்கலம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!

08:29 AM Nov 26, 2023 IST | Web Editor
இறுதிக் கட்டத்தை நெருங்கிய ஆதித்யா எல் 1 விண்கலம்   இஸ்ரோ தலைவர் சோம்நாத்
Advertisement

ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

Advertisement

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து சூரியனின் எல்-1 பகுதியை நோக்கிவிண்கலம் சீரான வேகத்தில் பயணித்து வருகிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவின் கட்டுப்பாட்டுமையத்தில் இருந்தவாறு விண்கலத்தின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணிக்கின்றனர்.

இந்நிலையில்,  ஆதித்யா எல்-1 விண்கலம் வருகிற ஜனவரி 7-ம் தேதி 'லெக்ராஞ்சியன்' புள்ளியை சுற்றி நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.  அங்கிருந்து விண்கலம் சூரியனை ஆய்வுசெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா-எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ, கடந்த செப்டம்பர் 2-ந்தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement