For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தவெக தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்!

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
05:42 PM Jan 31, 2025 IST | Web Editor
தவெக தேர்தல் பிரச்சார பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமனம்
Advertisement

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா, கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ‘அனைவருக்குமான தலைவர் அம்பேத்கர்’ நூல் வெளியீட்டு விழாவில் ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தது, விசிக கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்ததிலிருந்தே, அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் என வியூகங்கள் வகுக்கப்பட்டன. அதேபோல இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். இதேபோல், அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் தவெகவில் இணைந்தார்.

சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது. அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் தவெகவில் இணைந்தனர்.

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா கட்சியின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நிர்மல் குமார் துணை பொதுச்செயலாளராக (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

“தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜுனா, என்னுடைய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உடன் இணைந்து, அவரது அரசியல் வியூகங்களைப் பின்பற்றி, தேர்தல் பிரசாரங்களை வடிவமைத்து, தேர்தல் மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வார் என்பதை  தெரிவித்துக் கொள்கிறேன்” என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மூன்றாம் கட்டமாக 19 மாவட்ட பொறுப்பாளர்கள் கொண்ட பெயர் பட்டியலை தவெக வெளியிட்டுள்ளது. கட்சியின் நிர்வாக வசதிக்காக 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்ட தவெகவில் ஏற்கனவே 38 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று 19 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்தம் 57 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Tags :
Advertisement