#SubRegistrar அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன் விநியோகம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!
சுபமுகூர்த்த தினம் என்பதால் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இன்று (செப்.6) கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
சுப தினங்களாகக் கருதப்படும் நாட்களில் தமிழ்நாட்டில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் இன்று (செப்.6) கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பதிவுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பதிவுத்துறை நேற்று வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது :
"ஆவணி மாதத்தின் சுபமுகூர்த்த தினமான இன்று (செப்.6) அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், 2 பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அனுமதிக்கப்படுகின்றன.
இதையும் படியுங்கள் : T20 உலகக் கோப்பைக்கான ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் 10 ரன்னுக்கு ஆல்அவுட்டானது மங்கோலியா அணி!
அதிக அளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு அனுமதிக்கப்பட்ட 150 டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் டோக்கன்களுடன் கூடுதலாக 4 டோக்கன்கள் வழங்கப்படும்"
இவ்வாறு பதிவுத் துறை தெரிவித்துள்ளது.