For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு - #VCK மாநாட்டில் தீர்மானம்!

06:44 PM Oct 02, 2024 IST | Web Editor
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதிப் பகிர்வு    vck மாநாட்டில் தீர்மானம்
Advertisement

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் விசிக மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் மது விலக்கை அமல்படுத்த வேண்டும், தேசிய மது விலக்கு சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வருகிறது.

இந்த மாநாட்டினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இம்மாநாட்டில் விசிக கொடியை திருமாவளவன் எம்பி ஏற்றி வைத்து தீர்மானங்களை வாசித்தார்.

இந்த மாநாட்டில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், சிபிஎம் கட்சியிலிருந்து வாசுகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனி ராஜா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மகளிர் பிரிவு தலைவர் ஃபாத்திமா முஸப்பர், காங்கிரஸ் கட்சியின் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் வாசிக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு..

  • அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 47 இல் கூறியுள்ளவாறு மது விலக்கைத் தேசியக் கொள்கையாக வரையறுக்கவும் சட்டமியற்றவும் வேண்டும்
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி வழங்கிட வேண்டும்
  • மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்குக் கூடுதல் நிதிப் பகிர்வு அளிக்க வேண்டும்
  • மதுவிலக்கு விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்திட வேண்டும்
  • தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக, மதுபானக் கடைகளை மூடுவதற்குரிய கால அட்டவணையை அரசு அறிவித்திட வேண்டும்
  • தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்
  • மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பரப்பியக்கத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களை ஈடுபடுத்த வேண்டும்
  • குடி நோயாளிகளுக்கும் போதை அடிமை நோயாளிகளுக்கும் நச்சு நீக்க சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கான மையங்களை உருவாக்க வேண்டும்
  • மது மற்றும் போதை அடிமை நோயாளிகளுக்கான மறுவாழ்வு மையங்களை அனைத்து வட்டாரங்களிலும் அமைத்திட வேண்டும்
  • 'டாஸ்மாக்' என்னும் அரசு நிறுவனத்தின் மது வணிகத் தொழிலாளர்களுக்கு 'மாற்று வேலை' வழங்கிட வேண்டும்!
  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!
  • மதுவிலக்குப் பரப்பியக்கத்தில் அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைய வேண்டும்
Tags :
Advertisement