For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு - கொள்முதல் விலை ரூ.33 ஆக நிர்ணயம்!

09:57 PM Jan 04, 2024 IST | Web Editor
பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்ப்பு   கொள்முதல் விலை ரூ 33 ஆக நிர்ணயம்
Advertisement

பொங்கல் தொகுப்பில் 5 அடிக்கு மேலாக கரும்பு சேர்க்கப்பட்டு அதன் கொள்முதல் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு 238 கோடியே 92 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.  அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  GOAT படத்தில் இணைந்தார் அஜித் பட நடிகை..!

இந்த நிலையில் பொங்கல் தொகுப்பில் 5 அடிக்கு மேலாக கரும்பு சேர்க்கப்பட்டு அதன் கொள்முதல் விலை 33 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டுறவுத் துறை மூலம் கண்காணிக்கப்பட்டு கரும்பு கொள்முதல் செய்ய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 கோடியே 19 லட்சம் அளவுக்கு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.

கரும்பு அதிக அளவில் பயிர் செய்யும் மாவட்டங்களில் இருந்து தேவைப்படும் மற்ற மாவட்டங்களுக்கு கரும்புகள் கொள்முதல் செய்யப்படும்.  இடைத்தரகர்கள் பிரச்சனையின்றி கரும்பு கொள்முதல் நடைபெறும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement