Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அம்பானியை மீண்டும் பின்னுக்கு தள்ளிய அதானி - இந்தியாவின் பெரும் பணக்காரரானார்!

04:13 PM Jan 05, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவின் முதல் பணக்காரராக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி மீணடும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement

ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸில் (BBI) தரவுகளின்படி இந்தியா மற்றும் ஆசியாவின் 2024-ம் ஆண்டில் ஆசியாவில் மற்றும் இந்தியாவின் முதல் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி இடம் பிடித்துள்ளார். இதுவரை இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகள் மீதான புதிய விசாரணைக்கான கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் மிக வேகமாக முன்னேறிச் சென்றன. ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், இன்று காலை 9:30 மணி நிலவரப்படி கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 97.6 பில்லியன் (சுமார் ரூ.8,13,009 கோடி) டாலராக உள்ளது. அதே சமயம் முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 97 பில்லியன் (சுமார் ரூ.7,99,686 கோடி) டாலராக உள்ளது.

மேலும் உலக அளவிலான பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 12வது இடத்திலும், ஆசியாவின் முதல் பணக்காரர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முகேஷ் அம்பானி 13வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில், கௌதம் அதானி 15வது இடத்திற்கு ஏறி, 14வது இடத்தில் இருந்த அம்பானியை நெருங்கி இருந்தார். தற்போது 2024-ம் ஆண்டு அவரை முந்தியுள்ளார். கௌதம் அதானி கடைசி இடத்தில் இருந்து 7.67 பில்லியன் டாலர் பெற்று, ஆண்டுக்கு (YTD) 13.3 பில்லியன் டாலர் பெற்று முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, கௌதம் அதானி ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அவரது நிகர மதிப்பு பல இடங்கள் சரிந்ததது குறிப்பிடத்தக்கது. அதானி குழுமத்தின் வளர்ச்சி $100 பில்லியன் செலவினத் திட்டம், இலங்கையில் அதன் துறைமுகத் திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஆதரவு மற்றும் அண்மையில் மூன்று மாநிலங்களில் பாஜகவின் வெற்றிக்குப் பிறகு ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சி ஆகியவை இந்த வாய்ப்புக்கு பெருமளவில் பங்களித்ததாக கூறப்படுகிறது.

அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகளில் ஏற்பட்ட சரிவின் விளைவாக, அதானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 60% குறைந்து, 69 பில்லியன் டாலர்கள் வரை சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
adani groupBillionairesBloomberg Indexbusiness manGautam AdaniMukesh ambaniNews7Tamilnews7TamilUpdatesRichest In AsiaRichest In IndiaRIL
Advertisement
Next Article