Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தாமிர உற்பத்தியில் கால் பதிக்கும் அதானி குழுமம் - குஜராத்திற்கு கிடைக்கப்போவது என்னென்ன?

05:59 PM Feb 05, 2024 IST | Web Editor
Advertisement

தாமிர உற்பத்தியை குஜராத்தில் செயல்படுத்த அதானி குழுமம் முனைந்துள்ளது. இதன்மூலம் குஜராத் மாநிலத்திற்கு கிடைக்க இருக்கும் பலன்கள் குறித்து காணலாம்...

Advertisement

ஏன் தாமிர உற்பத்தி?

மாறிவரும் காலநிலை மாற்றத்தை கணக்கில் கொண்டு உலக நாடுகள் அதை கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன. அதற்கு புதைப்படிமான எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் நிலக்கரி போன்றவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டு, அதற்கு
மாற்றாக மின் வாகன பயன்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் போன்றவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதற்கு தாமிரம் மிக முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. இதனால் தாமிரத்தின் தேவை உலக அளவில் பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இது மேலும், அதிகரிக்கும்.

 2022-23 காலகட்டத்தில் 7.5 லட்சம் டன்னாக இருந்த தாமிரத்தின் தேவை 2027-ம் ஆண்டில் 18 லட்சம் டன்னாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2018- 19-ம் ஆண்டிற்கு முன் தாமிர ஏற்றுமதி நாடாக இருந்த இந்தியா இன்று 1.81 லட்சம் டன் தாமிரத்தை இறக்குமதி செய்யும் நாடாக மாறி உள்ள நிகழ்வு கவலைக்குரியது.

அபூர்வ உலோகம் தாமிரம்:

தாமிரத்தின் தேவையானது வாகன உற்பத்திக்கும், தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கும், மருத்துவத் துறைக்கும், உள்கட்டமைப்பு பணிகளுக்கும் வீட்டு உபயோக மின்னணு, மின்சார, அலங்கார-ஆடம்பர சாதனங்களின் தயாரிப்பிற்கும், கார், செல்போன் என எண்ணிலடங்கா பொருட்களின் தயாரிப்பிற்கும் தாமிரத்தின் பங்கு அளப்பரியது. அதை கணக்கிட்டு உலக நாடுகள் தாமிர உற்பத்தியின் பக்கம் தங்கள் பார்வையை திருப்பி உள்ளன.

2018-19-ம் ஆண்டு தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி ஆலை, தன் மீது கூறப்பட்ட பல்வேறு காரணங்களால் தன் தாமிர உற்பத்தியை நிறுத்தி 5 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டன. வழக்கு நிலுவையில் உள்ளது.வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி நிறுவனம் இந்தியாவின் தாமிர தேவைக்கு கிட்டத்தட்ட 40% பங்கை தன் உற்பத்தியின் மூலம் நிறைவு செய்து கொண்டிருந்தது.

ஒரு வளர்ந்து வரும் நாட்டின் தாமிர தேவையை குறைத்துக் கொள்வது என்பது சாத்தியக்கூறுகள் அற்றது. அதே சமயம் இறக்குமதியை தவிர்க்கவும், தாமிரத்தில் தற்சார்பு நிலையை அடையவும், ஏற்றுமதி மூலம் அந்நிய செலாவணியை ஈர்க்கவும், தாமிர உற்பத்திக்கு வாய்ப்புள்ள நாடுகள் முனையும். எனவே, தாமிர உற்பத்தியை குஜராத்தில் செயல்படுத்த அதானி குழுமம் முனைந்துள்ளது.

குஜராத் மாநிலத்திற்கு கிடைக்கக்கூடியவை:

இந்த மாற்றங்கள் எல்லாம் ஒரு சமயம் வேதாந்தா ஸ்டெர்லைட் தாமிர உற்பத்தி நிறுவனம் தன் பணியை தொடர்ந்து தூத்துக்குடியில் செய்து வந்திருந்தால், அல்லது இனி தொடர்ந்து செயல்பட்டால் இந்த அத்தனை பயன்களும் நல்ல வளர்ச்சி சூழலும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கலாம்!

Tags :
adani groupAELCopperCopper PlantGautam AdaniGujaratNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article