2023ல் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகைகள் - முதலிடத்தில் யார் தெரியுமா?
2023-ம் ஆண்டில் அதிக திரைப்படங்களில் நடித்து முன்னணியில் இருக்கும் நடிகைகளின் பட்டியலை இங்கு காணலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் இந்தாண்டு The Great Indian Kitchen, ஃபர்ஹானா, ரன் பேபி ரன், சொப்பன சுந்தரி, தீரா காதல், புலிமடா ஆகிய ஆறு படங்கள் நடித்துள்ளார். இதன்மூலம் 2023-ல் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- தி கிரேட் இந்தியன் கிச்சன்
இத்திரைப்படம் 2021-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த The Great Indian Kitchen என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். திருமணத்திற்கு பின் ஒரு பெண்ணின் அன்றாட வாழ்க்கை முறையை கண்ணாடி போல் இத்திரைப்படம் எடுத்து காட்டியது. முகபாவனைகளின் வழியே உணர்ச்சிகளை வெளிப்படுத்தி கதாபாத்திரத்தை அற்புதமாக நடித்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
- ரன் பேபி ரன்
பிப்ரவரி 3-ல் வெளிவந்த ரன் பேபி ரன் ஒரு திரில்லர் திரைப்படமாகும். கதாபாத்திரத்திற்கான நேரம் குறைவானதாக இருப்பினும் தனக்கான கதாபாத்திரத்தை தனது அருமையாக நடிப்பில் வெளிப்படுத்தி இருப்பார்.
- சொப்பன சுந்தரி
குலுக்கலில் விழும் காரை போலீசார் முடக்கிய நிலையில், அந்த காரை அடைய குடும்பத்தினர் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதே இப்படத்தின் கதையாகும். காக்கா முட்டை, வட சென்னை படங்களுக்கு பிறகு டயலாக் டெலிவிரியில் இத்திரைப்படத்தில் பட்டைடை கிளப்பியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். படத்தின் கிளைமாக்சிலும் அசத்தியுள்ளார்.
- ஃபர்ஹானா
முகமறியா நபர்களுடன் ஏற்படும் ‘ஃபிரண்ட்ஷிப் சாட்’களின் மூலம் வரும் ஆபத்துகளை எதார்த்தமானக் கதைக்களத்துடன் இத்திரைப்படம் காட்சிப்படுத்தியிருக்கும். இத்திரைப்படத்தின் பிற்பாதியில் வெளிப்படும் குற்றவுணர்வு, கணவருடனான தயக்கம், புதிய நட்பு தரும் உற்சாகம் என வேறொரு பரிமாணத்தையும் யதார்த்தமாகக் கண் முன் நிறுத்துகிறார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
- தீராக் காதல்
வெவ்வேறு திருமண பாதையில் சென்ற முன்னாள் காதலர்களின் சந்திப்பினால் இருவரின் வாழ்க்கையிலும் ஏற்படும் தாக்கங்களை பேசுகிறது இத்திரைப்படம். இதிலும் நடிப்பில் அசத்தியிருப்பார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
- புலிமடா
கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் திருமணத்தையும், அதனை ஒட்டி நிகழும் நிகழ்வுகளையும் மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைக்கதையாகும். இத்திரைப்படத்திலும் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் ஜஸ்வர்யா ராஜேஷ்.
மகிமா நம்பியார்
சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மகிமா நம்பியார். அறிவழகி என்னும் கதாபாத்திரத்தின் மூலம் தமிழ்நாடு மக்களின் மனதை கவர்ந்தார். தற்போது பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். ஆர்டிஎக்ஸ், வாலாட்டி என்ற மலையாள படங்களிலும், 800, நாடு, ரத்தம், சந்திரமுகி 2 என 6 படங்கள் நடித்து 2023-ம் ஆண்டில் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகைகள் பட்டியலில் இவரும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
- ஆர்டிஎக்ஸ்
மலையாள திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் அதிக வசூலை ஈட்டிய படங்கள் வரிசையில் இந்தப் படமும் சேர்ந்துள்ளது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் ரூ.8 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ.84 கோடி வரை வசூல் செய்தது. இத்திரைபடத்தில் வெளிவந்த ‘நீல நிலவே நிலவின் அழகே’ என்னும் பாடல் மூலம் அனைவரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
- வாலாட்டி
நாய்களுக்கு இடையிலான காதல் கதையை அழகாக வர்ணிக்கும் திரைப்படமே இந்த வாலாட்டி. இதில் மகிமா நாய்களின் மீது காட்டும் பாசமும், அவற்றின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயல்படும் விதமும் அற்புதமாக அமைந்துள்ளன.
- 800
புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறே இந்த திரைப்படமாகும். இதிலும் தனக்கான கதாபாத்திரத்தை குறைகூற முடியாத அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளார்.
- நாடு
விளிம்பு நிலையில் வாழ்பவர்களுக்கு மருத்துவ சேவையின் அவல நிலையைக் காட்டி, சிந்திக்கத் தூண்டும் திரைப்படமாக நாடு அமைந்துள்ளது. இத்திரைப்படத்தில் மகிமா நம்பியார் இளம் மருத்துவராக மிகுந்த நேர்மையுடன் நடித்துள்ளார். - சந்திரமுகி 2
முதல் பாகத்தை ஒப்பிடும்போது இரண்டாம் பாகம் அந்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இத்திரைப்படத்தில் தனக்கான இடத்தில் தனது நடிப்புத் திறனை சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார் மகிமா.
பிரியா பவானி சங்கர்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறியிருப்பவர் பிரியா பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக இருந்து, கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் தொடர்ந்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஏழு படங்களுக்கும் மேல் தன் கைவசம் வைத்திருக்கும் பிரியா பவானி சங்கர் இந்தாண்டு மட்டும் ஐந்து படங்கள் நடித்து 2023 ல் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகைகள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.
- ருத்ரன்
விமர்சன ரீதியாக படம் வெற்றியடையவில்லை. கதாநாயகியான பிரியா பவானி சங்கருக்கு முதற்பாதியில் எந்த வேலையும் இல்லை என்றாலும், இரண்டாம் பாதியில் திரைக்கதை நகர்வுக்குக் கைகொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்துள்ளார். அதைச் சிறப்பாகவே செய்திருக்கிறார்.
- அகிலன்
உலகின் பசி தீர்க்கும் லட்சியத்தை கடத்தல் மாஃபியா பின்னணியில் சொல்ல வந்த கதை அகிலன். படத்தில் அடியாளாக இருக்கும் ஜெயம் ரவியை கைது செய்யத் துடிக்கும் நேர்மையான காவல் அதிகாரியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் பிரியா பவானி ஷங்கருக்கு இந்த கேரக்டர் பொருந்தவில்லை என்பதே பலரது கருத்தாக அமைகிறது.
- பொம்மை
சிறு வயதில் தாயை இழந்த ராஜ்குமாருக்கு (எஸ்.ஜே.சூர்யா) தனிமையைப் போக்கும் விதமாக அவரது வகுப்புத் தோழியான நந்தினி அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். நந்தினியின் பாசத்தால் கட்டிப்போடப்பட்ட ராஜ்குமார், கோயில் திருவிழா ஒன்றில் நந்தினியை இழந்துவிடுகிறார். நந்தினியின் இழப்பு ராஜ்குமாரை மனநோயாளி ஆக்குகிறது. மனநோயிலிருந்து மீண்டாரா என்பதே படத்தின் கதை. தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.
- பத்து தல
கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் ரீமேக் தான் இந்த பத்து தல திரைப்படம். பிரியா பவானி சங்கருக்கான திரை நேரம் குறைவாக இருப்பினும் தனக்கான கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருப்பார்.
- கல்யாண கமனீயம்
பிரியா பவானி சங்கர் டோலிவுட்டில் அறிமுகமான படம் கல்யாணம் கமனீயம். இப்படத்தில் அவர் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி டோலிவுட்டில் நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளார்.