Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருமண வதந்திகள் குறித்து நடிகை திரிஷா பதிவு - அப்படியே தேனிலவையும் திட்டமிடுங்கள் என்று கிண்டல்..!

திருமணம் தொடர்பான வதந்திகள் குறித்து நடிகை திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
07:57 PM Oct 10, 2025 IST | Web Editor
திருமணம் தொடர்பான வதந்திகள் குறித்து நடிகை திரிஷா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Advertisement

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் நடிப்பில் வெளியான கில்லி, சாமி, வின்னைத்தாண்டி வருவாயா, 96 ஆகிய படங்களின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Advertisement

மேலும் திரிஷா தென்னிந்திய சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அவரது படங்களை தாண்டி தனிப்பட்ட விஷயங்கள் குறித்தும் அடிக்கடி இணையத்தில் பேசப்படுவது வழக்கம். குறிப்பாக திரிஷாவின் திருமணம்.  திரிஷாவின் திருமணம் குறித்து அவ்வப்போது வதந்திகள் எழுவது உண்டு.

இந்த நிலையில் இன்று காலை முதல் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபரை அவர் விரைவில் திருமணம் செய்துகொள்ள தகவல் வெளியானது.

இதனிடையே திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் “என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் அவர்களே திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம்  திரிஷா திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Tags :
cinemanewslatestNewsTrishaTrishaKrishnantrishamarraige
Advertisement
Next Article