For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

உக்கிரமாக நடனமாடிய நடிகை சிம்ரன்! - இணையத்தில் வைரல்

09:08 PM Feb 11, 2024 IST | Web Editor
உக்கிரமாக நடனமாடிய நடிகை சிம்ரன்    இணையத்தில் வைரல்
Advertisement

நடிகை சிம்ரன் 'சிவசக்தியோடு ஆடவா' பாடலுக்கு நடனமாடும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Advertisement

நடிகை சிம்ரன் 'ஒன்ஸ்மோர்'  திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து, துள்ளாத மனமும் துள்ளும், ஜோடி, வாலி, பிரியமானவளே,நேருக்கு நேர் மற்றும் பூச்சூடவா என வரிசையாக படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் திரைப்படங்களின் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்தார்.

இதையும் படியுங்கள் ; ‘என் மண், என் மக்கள்’ யாத்திரை ஊழல் வாதிகளுக்கு நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது - மத்திய அமைச்சர் எல்.முருகன் பேச்சு!

பின்னர், 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்திற்குப் பின் நடிப்பிலிருந்து விலகியிருந்தார். அதன்பின், பேட்ட, மகான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மீண்டும் சினிமாவுக்குள் நுழைந்திருந்திருக்கிறார். மேலும் மகான், நம்பி விளைவு ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

இந்நிலையில், பிதாமகன் திரைப்படத்தில் 'சிவசக்தியோடு ஆடவா' பாடலுக்கு நடனமாடியதை போல அதே பாடல் வரிகளுக்கு நடனமாடும் விடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோ பதிவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :
Advertisement