Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்!

08:22 PM Feb 14, 2024 IST | Web Editor
Advertisement

பாஜகவில் இருந்து விலகிய நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

Advertisement

ரஜினிகாந்தின் குரு சிஷ்யன் திரைப்படத்தின் மூலம் 1988 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் கவுதமி. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்த அவர், 90களில் தவிர்க்க முடியாத தென்னியந்திய நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர்.

1997 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த கவுதமி, அக்கட்சியின் இளைஞர் அணி துணை தலைவராக பணியாற்றினார். அப்போது ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அடல் பிஹாரி வாஜ்பாய்க்காக கவுதமி செய்த பிரச்சாரங்கள் அதிக கவனம் பெற்றன.

மகள் பிறந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற அவர் 2017 இல் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 2021 இல், அவர் ராஜபாளையம் சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்தார்.   25 ஆண்டுகளாக கட்சிக்கு உறுதியான விசுவாசமாக இருந்தும், தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று நடிகை கௌதமி குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் நடிகை கௌதமி எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து நடிகை கௌதமி அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

Tags :
ActressAIADMKedappadi palaniswamiGautaminews7 tamilNews7 Tamil Updates
Advertisement
Next Article