For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா... “இதே வேலையா போச்சு” என ரசிகர்கள் ஆவேசம்!

04:31 PM May 30, 2024 IST | Web Editor
நடிகை அஞ்சலியை தள்ளி விட்ட பாலைய்யா    “இதே வேலையா போச்சு” என ரசிகர்கள் ஆவேசம்
Advertisement

‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ பட நிகழ்வின் போது மேடையில் நடிகர் பாலகிருஷ்ணா நடிகை அஞ்சலியை தள்ளிய வீடியோ வைரலாகி வருகிறது. 

Advertisement

தெலுங்கில் புகழ்பெற்ற நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலைய்யா ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த என்.டி.ராமராவின் ஆறாவது மகனாவார். தெலுங்கு சினிமாவில் பாலையா படம் என்றாலே, நம்ப முடியாத சண்டைக்காட்சிகளில் கூட கவலைப்படாமல் அவர் நடிப்பார். அதற்கு தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான, வீர சிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் வெற்றிப் படங்களாகின. பாலய்யா அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம்.  பொதுமேடைகளில் திடீரென ரசிகர்களை அதட்டுவது, புகைப்படம் எடுக்க வந்தவர்களிடம் கோவப்படுவது, சில நேரங்களில் கைகளைக் கூட ஓங்கியிருக்கிறார்.

 

இந்நிலையில்,  தற்போது பாலகிருஷ்ணா புதிய சர்ச்சையில் மாட்டியுள்ளார்.  ‘கேங்ஸ் ஆஃப் கோதாவரி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின்போது,  சிறப்பு விருந்தினராக வந்த பாலகிருஷ்ணா,  மேடை ஏறியதும் நடிகை அஞ்சலியைத் தள்ளி நிற்கச் சொன்னார். தொடர்ந்து, திடீரென இன்னும் முன்னால் என அஞ்சலியைத் தள்ளிவிட்டார்.  இதில் தடுமாறிய அஞ்சலி,  இதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு சிரித்தார். ஆனால், பொதுமேடையில் நடிகை ஒருவரை தள்ளிவிடுவது அநாகரிகமான செயல் என பாலகிருஷ்ணாவைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

2021-ம் ஆண்டு:

கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டிற்கு பாலகிருஷ்ணா வந்திருந்தார். அங்கு அவர் வருவது குறித்து தகவல் அறிந்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவை பார்க்க கூடினர். அப்போது கூட்டத்தில் இருந்த ரசிகர் ஒருவர் ஆர்வமிகுதியில் திடீரென பாலகிருஷ்ணாவின் அருகில் சென்று போட்டோ எடுக்க முயன்றார். இதனால் பாலகிருஷ்ணா கோபமடைந்தார். அந்த ரசிகரை கடுமையாக திட்டினார், பிறகு ஓங்கி அடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுபோல பலமுறை தன்னுடன் போட்டோ எடுக்க வரும் ரசிகர்களை பாலகிருஷ்ணா தாக்கியுள்ளார்.

2023-ம் ஆண்டு:

கடந்த ஆண்டு அகண்டா திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனிடையே, ஒரு நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் தனது குழந்தையுடன் பாலகிருஷ்ணாவை பார்க்க சென்றார். அப்போது அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது. போட்டோவுக்கு போஸ் கொடுக்காமல் தூங்குறியானு கேட்டு அந்த குழந்தையை பாலய்யா அடித்து எழுப்பினார். இந்த வீடியோவும் வைரலாகி பாலய்யாவுக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தி தந்தது.

தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது:

அதுபோல தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாலய்யா பேட்டி கொடுத்த போது, அங்கிருந்த தொகுப்பாளர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் யாரென தெரியவில்லை. அவர் ஆண்டுக்கு ஒரு ஹிட் பாடலை கொடுப்பார் என்கிறார்கள். அவர் ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார் என்கிறார்கள். பாரத ரத்னா விருதெல்லாம் என்டிஆரின் செருப்புக்கு சமம், கால் விரல் நகத்திற்கு சமம் என கூறியிருந்தார். பாலகிருஷ்ணாவின் இத்தகைய பேச்சு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாலகிருஷ்ணா நடித்த பாடல்களை நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்திருந்தனர்.

மருத்துவமனை சர்ச்சை:

இப்படி தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வந்த பாலகிருஷ்ணா அண்மையில் ஒரு தகவலை கூறி மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். அவர் கூறியதாவது, “ஒரு முறை காயம் காரணமாக மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவ பணியாளரிடம் இது சின்ன காயம் தான் , எனக்கு சிகிச்சை வேண்டாம் என சொன்னேன். அப்போது அங்கு ஒரு நர்ஸ் வந்தார். மிகவும் அழகாக இருந்தார். உடனே நானே அந்த மருத்துவமனையில் அட்மிட் ஆகி வைத்தியம் பார்த்துக் கொண்டேன்” என்றார்.

இவரது பேச்சு வைரலான நிலையில் செவிலியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிகழ்வு தொடர்பாக பாலய்யா மன்னிப்பு கேட்டார். தனது வார்த்தைகள் செவிலியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என பாலய்யா தெரிவித்திருந்தார்.

This guy is a serial offender and no consequences.
byu/Electrolyist inBollyBlindsNGossip

Tags :
Advertisement