For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது! - குழந்தையின் பெயர் என்ன தெரியுமா?

09:54 PM Jun 17, 2024 IST | Web Editor
நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்தது    குழந்தையின் பெயர் என்ன தெரியுமா
Advertisement

நடிகை அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானாலும், மைனா திரைப்படத்திலிருந்து பலரால் அறியப்பட்டவர். அதனைத் தொடர்ந்து தலைவா உள்ளிட்ட படங்களில் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியானார்.

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட காதல், தலைவா திரைப்படத்திற்கு பிறகு பெற்றோர் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்தது. எனினும் அவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விலகினர். விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் அமலா பால் கவனம் செலுத்த தொடங்கினார். அஜய் தேவ்கன் இயக்கத்தில் வெளிவந்த ‘போலா’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்தார்.

கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி தனது பிறந்தநாளில் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து கேரளாவில் கடந்த நவம்பர் மாதம் எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியையும் அறிவித்தார்.

இதையும் படியுங்கள் : பெண்ணை மாடு முட்டிய விவகாரம்: பெண்ணின் கணவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு!

இந்நிலையில், தற்போது அவருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வீடியோ மூலம் அறிவித்துள்ளார். கடந்த 11ம் தேதி தனக்கு குழந்தை பிறந்ததாகவும் தற்போது குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் வீடியோவில் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ILAI என பெயரிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement