For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

GBU பட நடிகர் சாக்கோ மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு!

நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை அபர்ணா ஜோன்ஸ் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
09:04 PM Apr 25, 2025 IST | Web Editor
gbu பட நடிகர் சாக்கோ மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு
Advertisement

கேரளாவில் நடிகை வின்சி அலோஷியசிடம் நடந்து கொண்டது போலவே, அஜித்தின் Good bad ugly திரைப்படத்தின் வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, போதையில் என்னிடமும் அத்துமீறினார் என, மலையாள நடிகை அபர்ணா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement

ஏற்கெனவே போதை பொருள் பயன்படுத்தி நடிகர் ஷனை டாம் சாக்கோ, தன்னிடம் அத்துமீறியதாக நடிகை வின்சி அலோஷியஸ் புகார் தெரிவித்திருந்தார். இது குறித்து போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார், சாக்கோவிடம் விசாரிக்க, அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்ற போது, ஜன்னல் வழியாக தாவி, குதித்து அவர் தப்பினார். பின்னர், போலீசில் சரணடைந்த சாக்கோ கைது செய்யப்பட்டார் தொடர்ந்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில், நடிகை அபர்ணா ஜோன்ஸ் என்பவரும் ஷைன் டாம் சாக்கோ மீது பாலியல்  புகார் கூறியுள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டவீடியோவில், “சூத்திர வாக்கியம் என்ற மலையாள
படத்தில் நானும் நடித்தேன். அப்போது, ஷைன் டாம் சாக்கோ போதை பொருள்
பயன்படுத்தியதை பார்த்தேன். அவர் வாயிலிருந்து வெள்ளை நிறத்தில் பொடியை
துப்புவார். போதை மயக்கத்தில், நடிகை வின்சி அலோஷியசிடம் நடந்து கொண்டதைப் போலவே என்னிடமும் அவர் அத்துமீறினார்” என்று கூறியுள்ளார். இது குறித்து தனி பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
Advertisement