#D55 | அமரன் பட இயக்குநருடன் கைக்கோர்க்கும் தனுஷ் - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் தனுஷின் 55வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருப்பது படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி பாடகர், தயாரிப்பாளர், பாடல் எழுத்தாளர் மற்றும் இயக்குனராக அசதி வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'ராயன்'. தனது 50-வது திரைப்படமான ராயன் படத்தை நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்திருந்தார். சன் பிக்சர் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து, தனுஷ் திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தற்போது 'நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்' என்கின்ற திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கின்றார். அதை தொடர்ந்து 'இட்லி கடை' என்கின்ற திரைப்படத்தையும் இயக்கி வருகின்றார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக இன்று காலை அறிவிப்பு வெளியானது.
தெலுங்கு இயக்குநர் சேகர் கமுலா இயக்கத்தில் 'குபேரா' என்கின்ற திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்து முடித்து இருக்கின்றார். இது அவரது 51வது திரைப்படமாகும். 52வது திரைப்படமாக 'இட்லி கடை' , 53 வது திரைப்படமாக 'தேரே இஷ்க் மெய்ன், 54வது திரைப்படமாக 'இளையராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள் : ChennaiGrandMasters | 3-வது சுற்றில் அர்ஜுன் எரிகைசி வெற்றி – உலக தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!
இந்நிலையில், கடந்த சில நாட்களாக 'அமரன்' திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தான் நடிகர் தனுஷ் நடிக்க இருக்கின்றார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது, இது தொடர்பான அப்டேட் வெளியாகியிருக்கின்றது. அதன்படி நடிகர் தனுஷ் தனது 55 வது திரைப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கின்றார் என்பது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கின்றது. இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இந்த திரைப்படத்தை கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. 'அமரன்' திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தனுஷிடன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.